கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஹரன் பிரசன்னா - 11-06-10
Author: K. G. Jawarlal |
Publisher: New Horizon Media Pvt. Ltd. |
Publication Date: 40308 |
Number of Pages: 138 pages |
Binding: Fiction |
ISBN-10: 8184934467 |
ISBN-13: 9788184934465 |