Nilan Publishers
Nayanmaar Kathai (Part II)
Nayanmaar Kathai (Part II)
நாயன்மார்களின் வரலாற்றை அறிந்துகொள்வதனால் நம் பண்பு உயரும். பக்தி சுவை பொங்கத் திருத்தொண்டா புராணத்தைச் சேக்கிழார் காப்பியமாகப் பாடி அளித்திருக்கிறார். அதனை அடியொற்றி எழுதிய 27 நாயன்மார் வரலாறுகள் முதல் தொகுதியாக, 'நாயன்மார் கதை' என்ற பெயரோடு முன்பு வெளிவந்தன. இது இரண்டாவது தொகுதி.
இது திருஞானசம்பந்தர் வரலாற்றை மட்டும் கொண்டது. பெரிய புராணத்தில் அப் பெருமானுடைய புராணம் மிக விரிவாக அமைந்திருக்கிறது. இந்த வரலாற்றையும் சேக்கிழார் பெருமான் திருவாக்கை அடியொற்றியே எழுதினேன். இடையே பெரிய புராணப் பாடல் சிலவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளேன்.
'ஸ்ரீ காமகோடிப் பிரதீபம்' பத்திரிகையில் இந்த வரலாற்றைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அதற்கு வாய்ப்பளித்த அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு என் நன்றியறிவு உரியது.
திருஞான சம்பந்தப் பெருமானுடைய வரலாற்றினிடையே எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களைச் சேக்கிழார் காட்டியிருக்கிறார். பக்தர்கள் மேற்கொள்ள வேண்டியவை பல நல்ல மனிதர்கள் மேற்கொள்ள வேண்டியனவும் பல. சேக்கிழாருடைய திருவாக்கில் ஈடுபடும்போது அவருக்கு நாயன்மார்களிடத்தில் எவ்வளவு ப&
| Author: Ki Va Jagannathan |
| Publisher: Nilan Publishers |
| Publication Date: Dec 01, 2024 |
| Number of Pages: 100 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 8198357165 |
| ISBN-13: 9788198357168 |