Dhegam
$20.21
இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம். ***மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம். 1947-இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை? ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே - அவர்களில் கலைஞர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம் - முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே, அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது? புத்தகத்திலிருந்து
| Author: Charu Nivedita |
| Publisher: Ezutthu Prachuram |
| Publication Date: Dec 01, 2018 |
| Number of Pages: 180 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 9387707393 |
| ISBN-13: 9789387707399 |