பெண்கள் சொந்தக் காலில் நிற்க முடியாததன் அடிப்படையான விஷயத்தைப் பற்றி பெரியார் பேசுகையில், 'பெண்களுக்குச் சொத்துரிமை இருந்துவிட்டால், அவர்களின் எல்லா அசௌகரியங்களும் ஒழிந்துபோகும். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படாததன் காரணத்தை இதுவரை யாரும் சொன்னதே கிடையாது. பெண்களுக்குப் படிப்பு, தொழில் இரண்டையும் பெற்றோர் கற்பித்துவிட்டால், சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பிறகு, தங்கள் கணவன்மார்களை தாங்களே தேர்ந்தெடுக்கும் தன்மையும், பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கணவனோடு சுதந்திரமாக வாழ்க்கை நடத்தும் தன்மையும் உண்டாகிவிடும்' என்று தீர்க்கமாகக் குறிப்பிட்டார்.
| Author: Thanthai Periyar |
| Publisher: Nool Aayudham Publications |
| Publication Date: Aug 05, 2024 |
| Number of Pages: 74 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 9393188343 |
| ISBN-13: 9789393188342 |