இன்ஃபோசிஸ் இந்தியாவின் முதல் சாஃப்ட்வேர் வெற்றிக்கதைகளில் ஒன்று. இந்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் மேம்பட்ட எதிர்காலத்தையும் உண்டாக்கிய நிறுவனம். இன்றைக்கு இந்தியாவில் ஏராளமான மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய அலுவலகங்களைத் தொடங்கியிருக்கின்றன என்றால், இன்ஃபோசிஸின் ஆழமான விதையூன்றல்தான் அதற்குக் காரணம். பெரிய கனவுகளை நனவாக்கிய இந்நிறுவனத்தின் தொடக்கம், மிக எளிமையான முறையில் தொடங்கியது. நாராயணமூர்த்தியும் அவருடைய தோழர்களும் நம்பிக்கையுடன் எடுத்துவைத்த முதல் காலடி, ஒரு பெரிய பாதையாக உருமாறியது. இந்த அதிசயம் எப்படி நடந்தது? இன்ஃபோசிஸைத் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? புதிய துறையில் இவர்கள் கால் பதித்ததும் நடைபோட்டதும் எப்படி? இன்ஃபோசிஸின் வளர்ச்சியையும் சாதனைகளையும் சுவையான நடையில் ஆதாரபூர்வமாக விவரிக்கிறது இந்நூல். திருபாய் அம்பானி, பில் கேட்ஸ், அஜிம் ப்ரேம்ஜி, லட்சுமி மிட்டல் உள்ளிட்ட எண்ணற்ற தொழில்துறைச் சாதனையாளர்களுடைய வாழ்க்கையைச் சிறந்த நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனுடைய இந்
| Author: N. Chokkan |
| Publisher: Zero Degree Publishing |
| Publication Date: Feb 01, 2023 |
| Number of Pages: 158 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: 9393882401 |
| ISBN-13: 9789393882400 |