'இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு' என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம். இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப்பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர்விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு பழைய நிலையெய்த வேண்டுமாயின், அஃது இயற்கை வாழ்வில் பழையபடி தலைப்படல் வேண்டும். இக்கொள்கையை ஒல்லும்வகை பல வழியிலும் பரப்ப வேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வுணர்வு தோன்றிய நாள்தொட்டு யான் எம்மேடைமீது பேசினும் எந்நூலெழுதினும் இக் கொள்கையை எம்மூலையிலாவது வலியுறுத்துவது வழக்கம்.
| Author: Thiru V. Kalyanasundaram |
| Publisher: Blurb |
| Publication Date: Aug 23, 2024 |
| Number of Pages: 26 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: NA |
| ISBN-13: 9798331207991 |