இந்தப்புத்தகம், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் 13-ஆம் வருட விழாக் காலத்தில் இராமநாதபுரத்திற் கூடிய மகாசபையிற் படிக்கப் பெற்று எல்லோருக்கும் மிக்க இன்பத்தை விளைவித்ததென்பதைப் பலர் அறிந்திருத்தல் கூடும்; அப்போது அங்கிருந்தவர்களில் யானும் ஒருவனே. இதற்கு ஒரு முகவுரை யெழுதவேண்டுமென்று சங்கத்தின் காரியதரிசியவர்கள் தெரிவித்தமையால் இதனை எழுதலானேன். பண்டைக்காலத்திலிருந்த புலவர்கள் அரசர்கள் உபகாரிகள் முதலியவர்களுடைய வரலாறுகளையும், பிற செய்திகளையும் தெரிந்து கொள்ளுதலில் இக்காலத்தவர்களுக்கு மிக்க விருப்பமிருப்பினும் அவற்றை உள்ளபடியே தெரிவிக்கும் புத்தகங்கள் மிகச் சிலவேயுள்ளன. பழைய நூல்களை முற்றும் படித்து இன்புறுதற்கு வேண்டிய நேரமில்லாதவர்களுக்கு அவற்றிலுள்ள முக்கியமான விஷயங்களையும் சுவையான பாகங்களையும் தெரிவிக்கும் சிறிய வசன நூல்கள் மிகவும் உபயோகமானவை.
Author: R. Raghava Iyangar |
Publisher: Blurb |
Publication Date: Aug 23, 2024 |
Number of Pages: 50 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798331232610 |