பிறந்த மண் என்ற நெடுங்கதையைப் படித்து மகிழ்ந்தேன். கதைக் கோப்பு புதுமையாகவும் இயற்கை நலம் மேவியதாகவும் அமைந்திருக்கிறது. பாத்திரங்களின் இரண் டோர் அம்சங்களே சித்திரிக்கப் பெற்றுள்ளனவென்றாலும் அவர்கள் நம்முன் உயிர்த் தளிர்ப்புட்ன் நடமாடுகின்றனர். வாழ்க்கைத் துன்பங்களை மறப்பதற்காக இன்ப உலக மொன்றைப் படைத்துத் தரும் பொழுதுபோக்கு இலக்கிய மாகப் பிறந்த மண் உருப் பெறவில்லை. பகற் கனவிலோ உணர்ச்சி முனைப்பிலோ வடிவெடுத்த கதையைப் பொருளற்ற சொற்களை ஆளும் பொய்க்கால் நடையில் எடுத் துரைப்பதாகவும் அது அமையவில்லை. அனுபவத்தில் பண் பட்ட அறிவை அடிநிலமாகக் கொண்ட ஆசிரியனது மனோ பாவனையில் உதித்துத் திறமான புலமைக்குரிய தேர்ந்த சொற்களில் வெளியீடு பெறுகிறது.
Author: Na Parthasarathy |
Publisher: Blurb |
Publication Date: Aug 23, 2024 |
Number of Pages: 240 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798331279790 |