அரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது. கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம். இந்தத் தயக்கத்தைக் கூடியவரை தவிர்த்திருப்பவன் நான். தகர்த்திருப்பவன் என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். என்னுடைய நெஞ்சக்கனல், சத்திய வெள்ளம், பொய் முகங்கள், நிசப்த சங்கீதம் ஆகிய நாவல்கள் இதற்குச் சாட்சியாக நிற்பவை.
Author: Na Parthasarathy |
Publisher: Blurb |
Publication Date: Aug 23, 2024 |
Number of Pages: 228 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798331279905 |