வீரபத்தினியாகிய கண்ணகி தேவியின் வரலாறு, தமிழ் மொழியிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாய்ச் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்துள் விரித்துக் கூறப் பெறுவது. இஃது ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் காவிரிப்பூம் பட்டினம், மதுரை, வஞ்சி என்னும் சோழ, பாண்டிய, சேர நாட்டுத் தலைநகரங்கள் மூன்றின் சம்பந்தமும் பெற்ற உண்மைச் சரித்திரமாகும். இச்சரிதம் கடந்த காலமும் இதனைச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் காவியமாகப் பாடிய இளங்கோவடிகள் காலமும் ஒரே காலமாகும்; இதனுள் இச்சரித்திரம், உண்மைக்கு எவ்வளவு மாறுபடாததாயிருக்குமென்பது கூறவேண்டுவதில்லை. கண்ணகி தேவி சரிதையில், பெண்களின் உயர்வும், கற்பின் தெய்வத்தன்மையும், ஒழுக்கத்திறனும், வினையின் விளைவும் முதலாய பல நீதிகளும் பொருளும் அமைந்திருக்கின்றன.
Author: A. Karmegha Konar |
Publisher: Blurb |
Publication Date: Aug 23, 2024 |
Number of Pages: 58 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: NA |
ISBN-13: 9798331280055 |