தமிழ் நாட்டில் பழங்கால முதற்கொண்டு வீரம் மிக்க மன்னர்கள் வாழ்ந்தார்கள்; வள்ளல்கள் விளங்கினர்கள். அவர்களுடைய புகழைப் புலவர்கள் பாடினர்கள். அந்தப் பாடல்கள் புலவர்களின் பெருமையையும், பாடப்பெற்ற பெருமக்களின் பெருமையையும் ஒருங்கே தெரிவிக்கின்றன. அந்தப் பாடல்களால் பல வீரர்களுடைய வரலாறுகள் தெரிகின்றன; பெரு மன்னர்களும் குறுகிலமன்னர்களும் செல்வர்களும் செய்த அரிய செயல்கள் விளங்குகின்றன. சங்க காலத்து நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றில் இத்தகைய பெருமக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறிப்பிக்கும் பாடல்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் எழுந்த தொண்டை மண்டல சதகம், கொங்குமண்டல சதகம், தமிழ் நாவலர் சரிதை முதலியவற்றில் பிற்காலப் பெருமக்களின் பெருமையைக் காட்டும் அரிய நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
| Author: Ki Va Jagannathan |
| Publisher: Blurb |
| Publication Date: Aug 23, 2024 |
| Number of Pages: 106 pages |
| Binding: Paperback or Softback |
| ISBN-10: NA |
| ISBN-13: 9798881293772 |