சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் 'பணமே ஓடி வா'.'அள்ள அள்ளப் பணம்' என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.
Author: Soma Valliappan / சோம |
Publisher: New Horizon Media Pvt. Ltd. |
Publication Date: Jan 09, 2017 |
Number of Pages: 146 pages |
Binding: Paperback or Softback |
ISBN-10: 9386737221 |
ISBN-13: 9789386737229 |